கன்னியாகுமரி: குழந்தைகளுக்காக சிறப்புக் கவிதைகளையும் பாடல்களையும் சுதந்திரப்போராட்ட கவிதைகளையும் தந்தவர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த சுசீந்திரம் அருகே தேரூர் கிராமத்தில் 1876ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி பிறந்தவர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
தமிழ் மீது மிகுந்த ஆர்வமும் பற்றும் தமிழில் புலமை பெற்ற இவர் குறிப்பாக குழந்தைகளுக்காக சிறப்புக் கவிதைகளையும் பாடல்களையும், சுதந்திரப்போராட்ட கவிதைகளையும் பல இயற்றி உள்ளார். தமிழில் இவர் கொண்டுள்ள புலமையைப் போற்றும் வகையில் 1940ஆம் ஆண்டு இவருக்கு 'கவிமணி' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இத்தகைய சிறப்புகொண்ட 'கவிமணி' தேசிய விநாயகம் பிள்ளைக்கு, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்தரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது திரு உருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சிவபிரியா மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதில் அரசு அலுவலர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டிக்கான அரசாணை வெளியீடு - இனி காலை மெனு இதுதான்!