ETV Bharat / state

கிரிக்கெட் போட்டியின்போது பந்து பட்டதால் இளைஞர் பலி

செங்கல்பட்டு: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது மார்பில் பந்து பட்டதால் இளைஞர் உயிரிழந்தார்.

youth death in jayalalitha birthday celebration cricket competition
youth death in jayalalitha birthday celebration cricket competition
author img

By

Published : Feb 10, 2020, 8:36 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை அடுத்த அகரம் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. காஞ்சி மத்திய மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் பிரவீன் குமார் தலைமையில், டிசம்பர் 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் கலந்துகொள்ள 70க்கும் மேற்பட்ட அணிகள் பல கிராமங்களிலிருந்து வந்தன.

இப்போட்டியில் சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த சுனில் என்பவர் விளையாடிக் கொண்டிருந்தபோது, பந்து அவரின் மார்பு பகுதியில் பட்டது. இதனால் சுனில் நிலைதடுமாறி விளையாட்டு மைதானத்தில் சாய்ந்தார். இதையடுத்து அவருக்கு மதுராந்தகம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுனில்உயிரிழந்தார்.

ஜெயலலிதா பிறந்தநாள் விழா கிரிக்கெட் போட்டி

இந்த உயிரிழப்புக்கு காரணம் முறையான பயிற்சியாளர் இல்லாததும், விளையாடுவதற்கான சரியான மைதானம் இல்லாததுதான் என முதற்கட்ட விசாரணையில் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Intro:

*முன்னால் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் விளையாட்டில் போட்டியில் இளைஞர் பலி*

Body:செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அகரம் கிராமத்தில் மறைந்த ஜெயலலிதா 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் திருவிழா காஞ்சி மத்திய மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் பிரவீன் குமார் தலைமையில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் பிப்ரவரி 23 வரை 70க்கும் மேற்பட்ட அணிகள் பல கிராமங்களில் இருந்து சனி ஞாயிறு மட்டும் அகரம் கிராமத்தில் நடந்துகொண்டிருந்தது.

இப்போட்டியில் இன்று சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த சுனில் 19 S/0|சுரேஷ் விளையாடிக் கொண்டு இருக்கின்ற பொழுது பந்து அவருடைய மார்பு பகுதியில் பட்டதில் நிலைதடுமாறி விளையாட்டு மைதானத்தில் சாய்ந்தார் இவரை உடனடியாக மீட்டு மதுராந்தகம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிர் இறந்தார்.

இந்த இழப்புக்கு காரணம் முறையான பயிற்சியாளர் மற்றும் விளையாட்டு விளையாடுவதற்கான சரியான மைதானமும் இல்லாதது என முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர். Conclusion:இதுகுறித்து சூனாம்பேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.