ETV Bharat / state

விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு....பரந்தூர் கிராமத்தினர் போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் கருப்பு கொடி ஏந்தி அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 25, 2022, 7:53 AM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பரந்தூர் கிராமத்தில் புதிய விமான நிலையம் அமைக்க அண்மையில் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. மாநில அரசும் அதற்கான வேலைகளையும், நிலம் கையகப்படுத்தும் பணிகளையும் தொடங்கி செயல்பட்டு வருகிறது.

இவ்விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் தாலுகா மற்றும் அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட 12 கிராமங்கள் உள்ளடக்கிய பகுதிகளில், 4750 ஏக்கர் பரப்பளவில் புதிதாக விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.

பரந்தூர் கிராம மக்கள் போராட்டம்
பரந்தூர் கிராம மக்கள் போராட்டம்

அந்த 12 கிராமங்களில் வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பெடவூர், மடப்புரம் ஆகிய கிராமங்கள் காஞ்சிபுரம் தாலுகாவிலும், எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம், அக்கம்மாபுரம், சிங்கிலிபாடி உள்ளிட்ட கிராமங்கள் ஸ்ரீ பெரும்புதூர் தாலுக்காவிலும் அடங்கும்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம்

இந்நிலையில், இப்புதிய விமான நிலையம் அமைக்க 12 கிராமத்தை சேர்ந்த கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விளை நிலங்களுடன், குடியிருப்புகளும் அகற்றப்படவுள்ளதை அறிந்து பரந்தூர் கிராம மக்கள் தங்களின் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்து வந்தனர்.

இதில், நேற்று கழனியில் வேலை செய்துவிட்டு களைத்துப்போய் மாலையில் வீடுகளுக்கு வந்த பரந்தூர் கிராம மக்கள், அனைவரும் ஒன்று கூடி தங்கள் குழந்தைகளுடன் கைகளில் கருப்பு கொடியை ஏந்தி கிராம வீதியில் ஊர்வலமாக சென்று கோஷம் எழுப்பினர்.

பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் கருப்பு கொடி ஏந்தி பரந்தூர் கிராம மக்கள் போராட்டம்

கிராம மக்கள் போராட்டம் செய்வதை அறிந்து ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தங்களின் வாழ்வாதாரமான விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் கோடி கோடியாக பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் அதனை விட்டு வெளியேற மாட்டோம் என்றும், கிராம மக்கள் யாரும் கிள்ளு கீரைகள் அல்ல என்றும் 12 கிராம மக்களும் பொங்கி எழுந்து போராடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பிரதமரின் பஞ்சாப் நிகழ்ச்சியில் கறுப்பு நிறப்பொருட்களுக்குத் தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.