காஞ்சிபுரம்: உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் உத்திரமேருர் தொகுதிக்கு உட்பட்டப் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் உத்திரமேருர் பஜார் வீதியில் உள்ள வணிகர்கள், சாலையோர வியாபாரிகள், பூ வியாபாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் கடை, கடையாக சென்று தேர்தல் அறிக்கை, துண்டுப் பிரசுரங்களை வழங்கி சால்வை அணிவித்தும், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறியும் வாக்குசேகரித்தார்.
அதிமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆகியோர்களுடன் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். வாக்குசேகரிக்க வந்த அதிமுக வேட்பாளருக்கு வியாபாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட நடிகை ராதிகா!