ETV Bharat / state

காஞ்சிபுரம் அருகே 10,000 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லாரியை துரத்தி சென்று பிடித்த அதிகாரிகள்!! - காஞ்சிபுரம் மாவட்ட செய்தி

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெரும்புலிவாக்கம் என்ற இடத்தில் 220 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லாரியை வருவாய்த்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 14, 2023, 10:21 AM IST

காஞ்சிபுரம்: வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் ரேஷன் அரிசி வினியோகப்பட்டு வருகின்றது. இதற்கான மானியம் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த ரேஷன் அரிசி, சமூக விரோதிகளுக்கு பணம் காய்க்கும் மரமாகத்தான் இருந்து வருகிறது என்பது நீண்ட நாளைய குற்றச்சாட்டாக உள்ளது.

காஞ்சிபுரம் அருகே 10,000 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லாரியை துரத்தி சென்று பிடித்த அதிகாரிகள்

ஏழை மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ரேஷன் அரிசியை, சமூக விரோதிகள், நியாய விலைக்கடை விற்பனையாளர்களுடனும், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலுகர்களுடனும் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு கடத்தி பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.

ரேஷன் கடையின் விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவது மட்டுமல்லாமல் அந்தந்த பகுதியில் கிடங்கிகள் அமைத்து ரேஷன் அரிசி வாங்கும் பொதுமக்களிடமிருந்தும் ஒரு கிலோ அரிசி ஐந்து ரூபாய் என வாங்கி மொத்தமாக சேகரித்து அதை அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி பாலிஷ் செய்து, ஒரு கிலோ 50 ரூபாய் என விற்பனை செய்கின்றனர். இதில் வரும் லாபத்தில் குடிமைப் பொருள் அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், காவல்துறையினர் என அனைவருக்கும் பங்கு செல்வதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: லஞ்ச பணத்தில் வாங்கிய சொத்துக்களை முடக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை!

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரமாக உள்ள இந்த ரேஷன் அரிசி கடத்தல் அனைத்து மாவட்டங்களிலும் தினந்தோறும் நடைபெற்ற வருகின்றது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இது இப்படி இருக்க, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, குடிமைப் பொருள் காவல் ஆய்வாளர் சசிகலா, குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியர் இந்துமதி ஆகியோர் சென்னை பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜூலை 13ஆம் தேதி) வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது வேகமாக கடந்து சென்ற லாரி ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் விரட்டிச் சென்று ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிவாக்கம் என்ற இடத்தில் மடக்கினர். அந்த லாரியை சோதனை செய்த போது அதில் சுமார் 220 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தல்லில் ஈடுபட்ட கும்பல் லாரியை விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. பத்தாயிரம் கிலோ ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்த அதிகாரிகள் சிறு காவேரி பாக்கத்தில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்து தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பணியாளர்களை ஏற்றி செல்லும் வாகனத்தில் திடீர் தீ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.