ETV Bharat / state

நண்பர்களுடன் ஏரியில் குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு - ஏரியில் மூழ்கி பலி

செம்பரம்பாக்கம் ஏரியில் நீச்சல் தெரியாமல் நண்பர்களுடன் குளித்த 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவன் நீரில் இறக்கும் பதைபதைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஏரியில் குளித்த போது நீச்சல் தெரியாததால் மூழ்கிய பள்ளி மாணவன் உயிரிழப்பு

author img

By

Published : Sep 4, 2022, 4:25 PM IST

காஞ்சிபுரம்: குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (17). கோவூர் அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று (செப்.02) தனது நண்பர்களான சூர்யா, யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றவர் ஏரிக்கரையில் உள்ள படியில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தார்.

ஏரியில் குளித்த போது நீச்சல் தெரியாததால் மூழ்கிய பள்ளி மாணவன் உயிரிழப்பு

அவரது நண்பர் சூர்யா நீச்சல் அடித்தபடி குளித்துக் கொண்டிருந்த நிலையில், ஜெகதீசனையும் நீச்சல் அடிக்கும்படி ஏரியில் இறக்கியுள்ளார்.அப்போது நீச்சல் தெரியாத ஜெகதீசன் ஏரியில் மூழ்கினார். அவரை மீட்க சூர்யா போராடிய போது மீட்க முடியவில்லை.இது குறித்து குன்றத்தூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய ஜெகதீசனைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் இறந்த நிலையில் மீட்டனர். இச் சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
12ம் வகுப்பு பள்ளி மாணவன் ஜெகதீசன் நீச்சல் தெரியாமல் ஏரியில் மூழ்கி இறந்து போன பதைபதைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருமண வரவேற்பு விழாவில் போன் செய்த நடிகர் சூர்யா... நெகிழ்ந்த தம்பதி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.