முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், திருநாவுக்கரசர், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் உள்பட அக்கட்சியினர் திரளாக கலந்து கொண்டு மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறுகையில், "தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு விஞ்ஞான ரீதியாக இல்லை. முற்றிலும் தவறானது. காங்கிரஸ் கட்சி இந்தக் கருத்து கணிப்பை ஏற்கவில்லை. ஒரு நாடாளுமன்றத்தில் 25 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நான்கு பேர் வீதம் கருத்து கணிப்பு கேட்கப்பட்டுள்ளது. 11 லட்சம் வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள நாடாளுமன்றதில் 25 பேரிடம் கருத்து கேட்டு இருப்பது ஏற்புடையது அல்ல" என்றார்.