காஞ்சிபுரம் மாவட்டம், பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருமுக்கூடல் அடுத்த, உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட சித்தனக்காவூர் ஏரி நிரம்பியது.
சுமார் 180 ஏக்கரில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியால், 250 ஏக்கர் விளை நிலங்களின் 2 போக சாகுபடிக்கு பாசன வசதி அளிக்க முடியும். இந்த ஏரியிலிருந்து உபரிநீரை வெளியேற்றும்பட்சத்தில், சங்கிலி தொடராக அருகில் உள்ள ஐந்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும்.
இந்நிலையில், சித்தனக்காவூர் ஏரியின் ஒரு மதகின் அருகே மண் அரிப்பு ஏற்பட்டதால் ஏரி உடைந்து தண்ணீர் வேகமாக வெளியேறியது. இதனால், அருகில் உள்ள விளைநிலங்கள், 40 குடியிருப்புகளையும் ஏரி நீர் சூழ்ந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மாடு மேய்க்கும் சிறுவர்கள் மூலம் தகவலறிந்த கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலர், பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, உடைந்த பகுதியை சீரமைக்கும் பணியினை வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கனமழையால் முழுக் கொள்ளளவை எட்டிய 540 ஏரிகள்