ETV Bharat / state

TTF Vasan Arrest: நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது!

YouTuber TTF Vasan arrested: சாலையில் சாகசம் செய்து விபத்துக்குள்ளான பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை, சென்னையில் உள்ள அவரது நண்பர் வீட்டில் வைத்து இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 1:00 PM IST

YouTuber TTF Vasan arrested
நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது

காஞ்சிபுரம்: அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, அதனை தனது சமூகவலைதளமான யூடியூபில் பதிவேற்றம் செய்து பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவரது சாகசங்களைப் பார்த்து இளைஞர் சிறுவர் என பாகுபாடு இல்லாமல் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். மேலும் அதிவேகமாக பைக் ஓட்டுவதால் இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்து வந்தது. இதனிடையே சாலை விதிகளை மீறிய புகாரின்பேரில், போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார் வாசன். இந்த நிலையில், 'மஞ்சள் வீரன்' என்கிற திரைப்படத்திலும் தற்போது நடித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டிடிஎஃப் வாசன் சென்னையில் இருந்து - மகாராஷ்டிராவிற்கு தனது நண்பரான அஜித் என்பவருடன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஒருவரையொருவர் முந்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்டும், அதிவேகமாக வாகனத்தை இயக்கி, ஸ்டண்ட் என்று சொல்லக் கூடிய பைக் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார் வாசன்.

மேலும் வரும் வழிகளில் தனது ரசிகர்களுக்கு, தான் வரும் இடங்கள் குறித்தும் சமூகவளைதளங்களில் பதிவிட்டு தகவல் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே இளைஞர்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில், வாசன் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அந்த வகையில் காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, வீலிங் சாகசத்தில் வாசன் ஈடுப்பட்டள்ளார். அப்போது, பைக்கின் பின்புறமானது சாலையில் தேய்ந்து நிலை தடுமாறியதில் அவரது இருசக்கர வாகனம் இரண்டு மூன்று முறை பல்ட்டி அடித்து தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் வாசனுக்கு காயம் ஏற்பட்டு காரப்பேட்டை அருகிலுள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து தான் சென்னையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறிய வாசன் அங்கிருந்து சென்றதாக தெரிகிறது. மேலும் இதுபோன்று சாகசத்தில் ஈடுபட்ட வாசனின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆகையால் அவரைக் கைது செய்யக் கோரியும், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில் வாசன் மீது பாலுச்செட்டிசத்திரம் காவல் துறையினர் 279 IPC மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, 308 IPC பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கு பதியப்பட்ட பிறகு, சென்னையில் உள்ள நண்பர் அபீஸ் என்பவரின் வீட்டில் பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் இன்று விடியற்காலையில் போலீசார் கைது செய்தனர். பின்னர் காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் அவரை போலீசார் டிடிஎஃப் வாசனை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: TTF Vasan accident: டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து?.. என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.