காஞ்சிபுரத்தில் பல நியாயவிலைக் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அரிசி, பருப்பு, சர்க்கரை வாங்க கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
நியாயவிலைக் கடைகளில் பல மணி நேரம் காத்திருந்திருந்தாலும்கூட அரிசி, பருப்புகள் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நியாயவிலைக் கடைக்கு அரிசி வாங்க கொண்டுவந்த பையை வரிசையில் வைத்துவிட்டு பொதுமக்கள் நிழலில் சென்று நின்றுவிட்டனர்.
குறிப்பாக, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒரே இடத்தில் மக்கள் அதிகமாகக் கூடினர். எனவே நியாயவிலைக் கடைகளில் அனைத்துப் பொருள்களும் விரைவாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸால் வாழ்வாதாரத்தை இழந்த கீரை வியாபாரிகள்