ETV Bharat / state

வெள்ளத்தில் சிக்கிய ஆடு மேய்ப்பாளர்கள் - பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு - தேசிய பேரிடர் மீட்பு குழு

பாலாற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக வயல்வெளியில் இருந்த ஆடுகள், மாடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் கால்நடை உரிமையாளர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

வெள்ளத்தின் சிக்கியவர்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு

author img

By

Published : Nov 19, 2021, 6:09 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் வில்லிவலம் கிராமத்தின் அருகே பாலாறு செல்கிறது. இன்று (நவ.19) காலை வழக்கம்போல் அந்த கிராமத்தில் இருக்கும் ஆடு மேய்ப்பவர்கள் தங்களது ஆடுகளை மேய்ச்சல் நிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பாலாற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால் கடுமையான வெள்ளப்பெருக்கு பாலாற்றில் ஏற்பட்டுள்ளது. இதனால் வில்லிவலம் கிராமம் அருகே இருக்கக்கூடிய வயல்வெளியில் பாலாற்று வெள்ள நீர் திடீரென புகுந்து மேய்ச்சலில் இருந்த 20க்கும் மேற்பட்ட மாடுகள், 200க்கும் மேற்பட்ட ஆடுகளை அடித்துச் சென்றது.

மேலும், மேய்ச்சலுக்குச் சென்ற பத்துக்கும் மேற்பட்டவர்கள் வயல்வெளியிலுள்ள ஒரு மேட்டுப் பகுதியில் சிக்கிக்கொண்டனர்.

வெள்ளத்தின் சிக்கியவர்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு

இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், தேசிய பேரிடர் மீட்புக் குழுவிற்குத் தகவல் தெரிவித்தார்.

பின்னர் அங்கு வந்த மீட்பு குழுவினர் படகுகள் மூலம் பாலாற்றில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பத்துக்கும் மேற்பட்டவர்களை மீட்டனர்.

இதையும் படிங்க: Watch Video: கடும் வெள்ளத்தால் சாலை போக்குவரத்து துண்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.