ETV Bharat / state

பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்! - Kanchipuram police

mother and child Death: மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mother and child death during child birth at kanchipuram government primary health centre
பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 12:23 PM IST

பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகர் பழைய காலனியைச் சேர்ந்தவர் ரகோத்தமன். இவரது மனைவி சத்யா கர்ப்பம் அடைந்திருந்த நிலையில், பிரசவத்திற்காக மானாம்பதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று (ஜன.02) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில், சத்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பிரசவத்தின் போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் சத்யாவின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சத்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகரித்துள்ளதால் மேல்சிகிச்சைக்காக அவரை செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சத்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், சத்யாவின் உறவினர்கள், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தாயும், சேயும் உயிரிழந்துள்ளதாகக் கூறி, மானாம்பதி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியட் சீசர் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவித்த தாயும், சேயும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில், தற்போதும் மானாம்பதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாயும், சேயும் பிரசவத்தின் போது இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஆர்எஸ்எஸ் சேவகன் என்பதில் எனக்கு பெருமை' - நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.