தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டும், கரோனா முழு ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 500 ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவும் பெண்களுக்கு இலவச சேலை வழங்கும் விழாவும் பெரிய காஞ்சிபுரம் தர்கா பகுதியில் ஹமீத் அவுலியா நற்பணி மன்றம் சார்பில், மாநில நெசவாளர் அணிச் செயலாளர் T. அன்பழகன் தலைமையில், A. ராஜா முன்னிலையில் இன்று (ஜுன் 3) நடைபெற்றது.
மதிய உணவும் இலவச சேலையும் வழங்கிய எம்.எல்.ஏ
இதில் சிறப்பு விருந்தினராக திமுக மாநில மாணவரணிச் செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.-வுமான சி.வி.எம்.பி எழிலரசன் கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு, பெண்களுக்கு இலவச சேலையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் திமுக நகரச் செயலாளர் சண்பிராண்ட் கே. ஆறுமுகம், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.