ETV Bharat / state

ட்ரோன் மூலம் நேனோ யூரியா தெளிப்பு - மேலைநாடுகளைப்போல் விவசாயம் செய்துவரும் காஞ்சிபுரம் விவசாயிகள்! - தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தி வருகிறார்கள்

தமிழ்நாட்டில் முதல் முறையாக நேனோ யூரியாவை டிரோன்கள் மூலம் தங்களது விவசாய நிலங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தெளித்து வருகின்றனர்.தற்போது விவசாய தொழிலுக்கு நவீன தொழில்நுட்ப உத்திகளை கிராமப்புற இளம் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

டிரோன் மூலம் நேனோ யூரியா தெளிப்பு -மேலை நாடுகளைப் போல் மாறிவரும் காஞ்சிபுரம் விவசாயிகள்..!

author img

By

Published : Jun 9, 2022, 5:49 PM IST

காஞ்சிபுரம்: வேலையாட்கள் பற்றாக்குறை, ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணமாக நவீன தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ள விவசாயிகள், நிலத்தை உழுவதற்கு மாடுகளை மாற்றிவிட்டு டிராக்டர் மூலமும், தண்ணீர் பாய்ச்சுவதற்கு சொட்டு நீர் பாசனமும், நாற்று நடுவதற்கும், அறுவடை செய்வதற்கும் வேலையாட்களுக்குப் பதிலாக இயந்திரங்களையும் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.

பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிப்பதற்கு மட்டும் வேலையாட்களை வைத்து மோட்டார் ஸ்பிரேயர் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தை உழுவதற்கும், தண்ணீர் பாய்ச்சுவதற்கும், நாற்று நடுவதற்கும், கதிர் அறுப்பதற்கும், நவீன தொழில்நுட்ப உத்திகளைக் கையாண்டு வரும் விவசாயிகள், தற்பொழுது மேலை நாடுகளுக்கு இணையாக பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க ட்ரோன் இயந்திரங்களையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தாங்கி கிராமத்தில் அதிகம் நெல் பயிர் செய்யும் விவசாயிகள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க வேலையாட்கள் மூலம் மோட்டார் ஸ்பிரேயர் வைத்து, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து வந்த நிலையில், இதற்கு அதிக நேரமும், அதிக செலவும் பிடித்ததால், தற்பொழுது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க நவீன உத்திகள் மூலம் ட்ரோன்களைப் பயன்படுத்தி குறுகிய நேரத்தில் வேலையாட்கள் யாரும் இன்றி காலை, மாலை வேளைகளில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து, பயிர்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

அதன்படி இந்திய உழவர் உரக்கூட்டு நிறுவனம் (இப்கோ) விவசாயத்தில் ஒரு புதிய புரட்சியாக உலகிலேயே முதல் நேனோ யூரியாவை இந்திய விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதனை தமிழ்நாட்டில் முதன்முறையாக தற்போது இந்த இப்கோவின் நேனோ யூரியா மருந்தினை, ட்ரோன் மூலம் நேரடியாக, விவசாய நிலத்திற்கு தெளிக்கும் முறையை காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

நேனோ யூரியா என்பது நேனோ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட உரமாகும். இந்த நேனோ யூரியா 500 மில்லி லிட்டர் பாட்டிலில் விவசாயிகளுக்கு கிடைக்கின்றது. இதன்விலை ரூபாய் 240 மட்டுமே. சாதாரண குருணை யூரியாவைவிட 10 விழுக்காடு விலைக்குறைவு. அரை லிட்டர் (500 மி.லி) நேனோ யூரியா ஒரு மூட்டை யூரியாவுக்கு நிகரான பலனை பயிர்களுக்கு அளிக்கிறது.

டிரோன் மூலம் நேனோ யூரியா தெளிப்பு -மேலை நாடுகளைப் போல் மாறிவரும் காஞ்சிபுரம் விவசாயிகள்..!

இந்த நேனோ யூரியாவை இலைவழி தெளிப்பாகப் பயன்படுத்தும்போது, இலையில் உள்ள துவாரங்களின் மூலம் உறிஞ்சப்பட்டு, பயிர்களுக்குத்தேவையான தழைச்சத்தை சீராக 20 முதல் 25 நாட்களுக்குப் பயிர்கள் பசுமையாக இருக்க உதவி செய்கிறது.

இந்த நேனோ யூரியாவை விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அல்லது இப்கோ நிறுவன முகவர்கள் இடமும் தங்கு தடையின்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இளம் விவசாயிகள் ஒரு சிலர் மட்டுமே ட்ரோன்களை பயன்படுத்தி வரும் நிலையில், அதன் பயன்பாடுகளை அறிந்து அனைத்து விவசாயிகளும் ட்ரோன்களை பயன்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சன உண்மையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ட்ரோன் மூலம் கரும்பு பயிர்களுக்கு களைக்கொல்லி மருந்து தெளிப்பு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.