ETV Bharat / state

இருசக்கர வாகன திருடர்கள் இருவர் கைது

ஸ்ரீபெரும்புதூரில் இருசக்கர வாகன திருடர்கள் இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இருசக்கர வாகனங்களை திருடும் சிசிடிவி காட்சிக வெளியாகியுள்ளது.

author img

By

Published : Dec 1, 2022, 7:01 AM IST

காஞ்சிபுரத்தில் பிடிபட்ட பைக் திருடும் மாஃபியா கேங்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடுபோவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவன் சிவாவின் டியூக் இருசக்கர வாகனமும் திருடு போய் உள்ளது.

இதனால் மனமுடைந்து போன கல்லூரி மாணவன் சிவா கடந்த 30 நாட்களுக்கு மேலாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனது இருசக்கர வாகனத்தின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகளை தனது நண்பர்களுக்கு அனுப்பி தேடி வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நேற்று பெரம்பூர் பகுதியில் தனது இரு சக்கர வாகனம் உள்ளது என்ற தகவலை சேகரித்த சிவா தனது இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பைக் திருட்டில் ஈடுபட்ட காஞ்சிபுரம் நீர்வல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (22), தமிழரசன் (22) ஆகிய இருவரை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரித்த போது திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்தது. பிரசாந்த் மற்றும் தமிழரசன் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கிரைம் எஸ் ஐ செந்தமிழ் செல்வன் தலைமையில் விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார் அம்பத்தூர், மணலி, காஞ்சிபுரம், கல்பாக்கம் பகுதிகளில் விலை உயர்ந்த 4 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி 6 பேரை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் விசாரித்தனர்.

திருடியவர்கள் இருசக்கர வாகனங்களை நம்பர் பிளேட்டை அகற்றிவிட்டு தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திய பின்பு 20 முதல் 30 ஆயிரம் என விலை பேசி விற்றுள்ளனர். மேலும் பிரசாந்த் தமிழரசன் உட்பட 8 பேரை விசாரித்த போலீசார், இருசக்கர வாகனங்களை வாங்கியவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என 6 பேரை விடுவித்து முக்கிய நபர்களான பிரசாந்த் மற்றும் தமிழரசன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட் பிரச்சனைக்கு தீர்வு இருக்கு - அன்புமணி கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.