காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் பயிலும் சில மாணவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் மையத்தில் பயிலும் 235 மாணவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதில் 2 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு தனியார் மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 16 மாணவர்கள் அம்மைய வளாகத்தில் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இம்மாணவர்களை தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து மாணவர்களின் உடல் நிலை மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த ஓர் ஆண்டில் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்களில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
மருத்துவ வல்லுநர்கள் கூறுகையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு தற்போது உள்ள உருமாறிய வைரஸ் நோய்களுக்கு பாதிப்பு பெரிய அளவில் இருக்காது எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நண்பரின் பிறந்தநாள் மது பார்ட்டி - வீடு திரும்பிய இரு நண்பர்கள் விபத்தில் பலியான சோகம்!