கள்ளக்குறிச்சி: நிறைமதி கோமுகி ஆற்று பகுதியில் நிறைமதி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஆனந்தராஜ் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். ஆனந்தராஜ் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ஆனந்தராஜ் நண்பர்கள் நான்கு பேரிடம் வரஞ்சரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆனந்தராஜின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆனந்தராஜின் உடற்கூராய்வு முடிவுகள் வந்த பின் உடலை பெற்றுக் கொள்வதாகவும், இளைஞரின் மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும் கள்ளக்குறிச்சி - கூத்துக்குடி சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹார்லால், கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் பிரபாகரன் ஆகியோர் பொதுமக்கள் இடையே சமரச பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பழுதடைந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் - இட மாற்றம்