ETV Bharat / state

மத்திய அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார திட்டம் 2020ஐ திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய மின்வாரிய ஊழியர்கள்

author img

By

Published : Dec 21, 2020, 11:08 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்த மின்சார திட்டம் 2020ஐ திரும்ப பெறவேண்டும், மின்வாரியத்தை தனியார் மயமாகும் முடிவை திரும்ப பெற வேண்டும், மின்வாரியத்தில் காலியாகவுள்ள 27 ஆயிரம் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்பும் முடிவை ரத்து செய்ய வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

மின்வாரியத்திலுள்ள தற்காலிக பணியாளர்களைக் கொண்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனியாரிடம் ஒப்படைத்த துணைமின் நிலையங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய மின்வாரிய ஊழியர்கள்

இதேபோல், காஞ்சிபுரம், கடலூர், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மின்வாரியத்தில் ஹெல்பர், வயர்மேன் பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.