கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள், தரணி சர்க்கரை ஆலையின் கொள்முதல் செய்த கரும்புகளுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக உரிய தொகையினை வழங்காததைக் கண்டித்து, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரணி சர்க்கரை ஆலைக்கு எதிராக முழக்கமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய் வர்தினியிடம் கோரிக்கை மனு ஒன்றினையும் வழங்கினர். இந்த மனுவில், ”தரணி சர்க்கரை ஆலை, கடந்த இரண்டு ஆண்டுகளாக முடியனூர் கிராம விவசாயிகளுக்கு மட்டும் சுமார் 80 லட்ச ரூபாய்க்கு மேல் நிலுவையில் தொகை வழங்காமல் இருந்துள்ளனர்.
அதனைப் பெற்றுத்தர வேண்டும் என்றனர். மேலும், முடியனூர் கிராம கரும்பு விவசாயிகளின் கரும்பினை அருகிலுள்ள பண்ணாரி அம்மன் கரும்பு ஆலைக்கு கரும்புகளை பதிவுசெய்து கொள்முதல் செய்ய வழிவகை செய்ய வேண்டும்” என்று கோரிக்கைவைத்தனர்.
இதையும் படிங்க: தனிநபர் ஆக்கிரமித்த கால்வாய்: தண்ணீரின்றி விவசாயிகள் அவதி