கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகுதண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேரில் பார்வையிட்டார்.
ஆட்சியர் தலைமையில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், ஆர்த்தோ மருத்துவர்கள் ஆகியோர்கள் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்தனர். இந்த முகாமிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதுகுத் தண்டுவடம் பாதிக்கபட்ட மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நவீன தொடுதிரை அலைபேசியைப் பெற அலையாய் அலையும் மாற்றுத்திறனாளிகள்!