ETV Bharat / state

கரும்பு இனிப்பானது; விவசாயி வாழ்க்கை கசப்பானது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி என்றால் தித்திக்கும் கரும்பு விவசாயிகள் ஞாபகத்துக்கு வரும். ஆகவேதான் அந்த மாவட்டத்தில் மட்டும் ஐந்து சர்க்கரை ஆலைகள் உள்ளன. சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையைத் தராமல் உள்ளது. இதனை பெற்றுத் தர வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு கள்ளக்குறிச்சி கரும்பு விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கரும்பு இனிப்பானது
கரும்பு இனிப்பானது
author img

By

Published : Mar 12, 2020, 11:56 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பிரதான பயிராகவும் அதிகளவு பயிர்செய்து அறுவடை செய்யும் பயிராகவும் கரும்பை பயிரிட்டுவருகின்றனர். ஆகையால்தான் கள்ளக்குறிச்சி என்றால் தித்திக்கும் கரும்பு, விவசாயிகள் ஞாபகத்துக்கு வரும். எனவேதான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் மூன்று கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இரண்டு தனியார் சர்க்கரை ஆலைகள் என மொத்தம் ஐந்து சர்க்கரை ஆலைகள் உள்ளன.

விவசாயிகளின் கோரிக்கை

இந்த ஐந்து சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவுசெய்யப்பட்டும், பதிவுசெய்யப்படாமல் ஏறக்குறைய ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் விவசாயிகள் கரும்பை பிரதானமாகப் பயிரிட்டுவருகின்றனர்.

தியாகதுருகத்தில் உள்ள தரணி சர்க்கரை ஆலைக்கு மட்டும் அப்பகுதியைச் சுற்றியுள்ள 172 கிராமங்களைச் சேர்ந்த மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவிற்கு பதிவு செய்து ஆண்டுதோறும் கரும்பு அரவைக்கு அனுப்பிவந்த நிலையில் ஆலை நிர்வாகம் கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு அறிவித்த கிரைய தொகையை மட்டும் வழங்கிவிட்டு, மாநில அரசு வழங்கிய ஊக்கத் தொகையை வழங்காமல் இருந்த நிலையில் கடந்தாண்டு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்த தொகையையும் வழங்காமல் இதுவரை தங்களை ஏமாற்றிவருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து தங்கள் பணத்தைப் பெற்றுத் தருமாறு மாவட்ட ஆட்சியர், மாநில சர்க்கரை ஆணையர் இவர்களிடம் பலமுறை புகார் அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறுகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாநில சர்க்கரை ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் இந்தப் பகுதி விவசாயிகள் அறுவடை செய்த கரும்பை கள்ளக்குறிச்சி கோமுகி கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்கு அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

விவசாயி வாழ்க்கை கசப்பானது

இந்நிலையில் கரும்பு அறுவடை செய்யும் வேலையை தரணி சர்க்கரை ஆலை ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளதால் இதற்காக கடந்தாண்டு கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற கடனுக்கு அசல் வட்டி எனப் பிடித்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் அச்சத்துடம் உள்ளனர்.

ஆலை நிர்வாகம் கடந்தாண்டுக்குப் பணத்தை வழங்காமல் ஏமாற்றுவதற்குத் தாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும் என அலுவலர்கள் கூறுகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் இந்தப் பிரச்னையை பரிசீலனை செய்து தங்களுக்கு வரவேண்டிய பணத்தை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கரும்பு விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும் திருக்கோவிலூர் ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த கிராம விவசாயிகள் பதிவுசெய்யப்பட்ட தரணி சர்க்கரை ஆலையிலிருந்து ஓராண்டு அரவை கரும்பு பணமே வராத நிலையில் இந்தாண்டு கரும்பு வெட்டுவதற்கு காலதாமதமாகி இருப்பதால் கரும்பின் ஆயுள்காலம் 10 மாதம் தாண்டி 13 மாதம் சென்றுள்ளதால் கரும்பு வயல் பாதி காய்ந்துபோகும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக கரும்பு விவசாயிகள் மனவேதனையுடன் இதனைக் கூறுகின்றனர்.

மேலும் தங்களுக்கு அருகில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: செங்காந்தள் விதைகளை அங்கீகரிக்கப்பட்ட பயிராக அறிவிக்க கோரிக்கைவிடுக்கும் விவசாயிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.