கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், குழந்தை முதல் பெரியவர்கள் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தியாகதுருகம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ள சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு, போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும், உணவும் சரிவர வழங்குவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கரோனாவால் பாதிப்புக்குள்ளாகி தனிமைப்படுத்தபட்டுள்ளவர்கள் காணொளி மூலமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.