கள்ளக்குறிச்சி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜயின் 48ஆவது பிறந்தநாள் கடந்த ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இது தமிழ்நாடு மட்டுமில்லாமல், வெளிநாடு வாழ் விஜய் ரசிகர்களாலும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
அந்த வரிசையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் சதாம் உசேன் ஏற்பாட்டில், 48 அடி நீளமும் 580 கிலோ எடையும் கொண்ட கேக்கினை 19 மணி நேரத்தில் தயார் செய்துள்ளனர்.
பின்னர், இந்த பிரமாண்ட கேக் சங்கராபுரம் நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த கேக்கினை 48 பெண்களை வெட்ட வைத்து விஜயின் 48ஆவது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளனர். தற்போது இதுகுறித்த வீடியோக்கள் விஜய் ரசிகர்களால் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், இயக்குநர் வம்ஷி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு ‘வாரிசு’ எனப் பெயர் வைத்ததோடு, படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்களை வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு டிரீட் வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பல "வாரிசு"களுக்கு மத்தியில் நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய்!