ஈரோடு கிழக்குத் தொகுதிக்குள்பட்ட 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர் ஆகாஷ், வாக்காளர் பெயர் பட்டியலில் தனது பெயர் நேற்றுவரை இல்லாதிருந்தது தனக்கு ஏமாற்றம் அளித்ததாகக் குறிப்பிட்டார். இன்று (ஏப். 6) அவர் தனது குடும்பத்துடன் வாக்களிக்க இயலவில்லை என்ற ஏக்கத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார்.
கட்டாயமாக வாக்களிக்க
அப்போது சிலர் தொகுதி வாக்குப் பட்டியலில் அவரது பெயர் இருந்ததாகக் கூறினார். உடனே அப்பகுதி வாக்குச்சாவடியில், தனது வாக்கை அவர் உடனடியாகச் செலுத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், முதல்முறையாக தான் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதாகவும், ஒருமுறை பதினெட்டு வயது நிரம்பிய பெயர் பட்டியலில் இடம் பெறாத நபர்கள் வாக்குச்சாவடியில், சரிபார்த்துக் கொள்ளுமாறும், மேலும் 18 வயது நிரம்பிய இளம் தலைமுறையினர், கட்டாயமாக வாக்களித்து தொகுதிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும்படி, இளம் தலைமுறையினருக்கு அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
முதல்முறை தனக்குப் பிடித்த வேட்பாளருக்கு வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும், மகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.