ETV Bharat / state

உலகின் மிகப்பெரிய பைரவர் ஆலயத்திற்கு கும்பாபிஷேக விழா எப்போது தெரியுமா? - Roundabout at Rattai near Avalpoonthurai

ஈரோடு அருகே ராட்டைசுற்றிபாளையத்தில் உலகின் மிகப்பெரிய பைரவர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக ஸ்வர்ண பைரவ பீடம் அறக்கட்டளை நிர்வாகி தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய பைரவர் ஆலயத்திற்கு மகா கும்பாபிஷேகம் விழா எப்பொழுது?

author img

By

Published : Dec 4, 2022, 5:42 PM IST

ஈரோடு: காங்கேயம் அருகே உள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் உலகப் புகழ்பெற்ற பைரவர் கோயில் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கோயில் கட்டுமானப்பணிகள் தற்பொழுது முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் கோயிலின் நிலை குறித்து ஸ்வர்ண பைரவ பீடத்தின் அறக்கட்டளை நிர்வாகி கூறியிருப்பதாவது, ’உலகிலேயே எங்கும் இல்லாதவாறு 64 பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்லாது 39 அடி காலபைரவர் சிலை மிக பிரமாண்டமாக நிறுவப்பட்டு உள்ளது.

இந்த சிலை 'யுனிக்யூ புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்' எனும் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. கோயிலின் திருப்பணியானது ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது.

நம் ஆலயத்தில் பிரமாண்டமாக அமைந்துள்ள 650 கிலோ பஞ்சலோக சிலைக்கு நெய் ஆரோக்கியத்தின் வடிவமாகவும்; நாணயங்கள் செல்வத்தின் வடிவமாகவும் அர்ப்பணிக்கப்படும். மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நான்கு கால பூஜையாக நடைபெற உள்ளது.

10.3.2023: மாசி மாதம் 26ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சுவர்ண ஆகர்ஷண பைரவ பஞ்சலோக சிலைக்குப் பொதுமக்களால் நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது.

11.3.2023: மாசி மாதம் 27ஆம் நாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்திற்குப் பிறகு முதற்கால பூஜை ஆரம்பம்; மதியம் 2:30 மணிக்கு அவல்பூந்துறை ஈஸ்வரன் கோயிலில் இருந்து பைரவர் ஆலயத்திற்கு பொதுமக்களால் தீர்த்தம் எடுத்து வருதல். தீர்த்த ஊர்வலம் யானை, குதிரை கிராமிய நிகழ்ச்சி மற்றும் வாண வேடிக்கையுடன் சிறப்பாக நடைபெறும்.

12.3.2023: மாசி மாதம் 28ஆம் நாள் அன்று காலை 10 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை ஐந்து மணிக்கு மூன்றாம் கால பூஜை, இரவு 7 மணிக்கு மேல் பாரம்பரிய கும்மி திருவிழா நடைபெறும்.

13.3.2023: திங்கட்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜை மற்றும் 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறும்.

10.3.2023 வெள்ளிக்கிழமை முதல் 13.3.2023 திங்கள்கிழமை வரை கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்’ இவ்வாறு கூறினர்.

இதையும் படிங்க:மழைநீர் வடிகால் பணி: தலைமை செயலாளர் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.