ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 152 பேர் கைது

ஈரோடு: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு குற்றவாளிகள் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்திக்கு முன்னெச்சரிக்கையாக 152 பேர் கைது
author img

By

Published : Aug 29, 2019, 12:05 PM IST

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 2-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஈரோட்டில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 152 பேர் கைது

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசனின் அறிவுறுத்தலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு குற்றவாளிகள் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சட்டம்-ஒழுங்கு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Intro:ஈரோடு ஆனந்த்
ஆக.29

விநாயகர் சதுர்த்தி: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 152 பேர் கைது!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் கண்காணிப்பு குற்றவாளிகள் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Body:நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதில் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

ஈரோட்டில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின்பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விநாயகர் சிலை வழிபாடு மற்றும் ஊர்வலத்தின் போது சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Conclusion:ஈரோடு மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை வாகன சோதனை நடத்தியதில் 2674 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.