ETV Bharat / state

ஈரோட்டில் தற்காலிக நடத்துநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள்..! - ஈரோடு பேருந்து நிலையம்

Transport issue: ஈரோடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ஈடுபட்ட தற்காலிக நடத்துநரிடம், போக்குவரத்து தொழிலாளர்கள் பணி செய்வதற்கான எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் பணி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு
ஈரோடு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 10:23 PM IST

Updated : Jan 9, 2024, 11:00 PM IST

ஈரோட்டில் தற்காலிக நடத்துநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள்..!

ஈரோடு: ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்றனர். இதில், சுமுக தீர்வு எட்டப்படவில்லை.

இதனால், ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. இதனைத் தொடர்ந்து, நேற்று (ஜனவரி 08) போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து நிதித்துறைச் செயலர் உடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையிலான இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதையடுத்து "அரசின் பதிலில் திருப்தி ஏற்படாததால் நாளை திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நடைபெறும்" என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதன்படி ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்கள், பணியில் ஈடுபட்டு வந்த நடத்துநரை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மத்திய பேருந்து பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பாக, ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து கொடுமுடி செல்லும் சாலையில் உள்ள நடுப்பாளையம் வரை இயக்கக் கூடிய அரசு பேருந்தில் ஈடுபட்ட தற்காலிக நடத்துநரிடம், பணி செய்வதற்கான எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் பணி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் நடுப்பாளையம் செல்லக்கூடிய பேருந்தானது கால தாமதமாகப் புறப்பட்டது.

இதையும் படிங்க: பொங்கல் ரேஸில் இருந்து விலகிய 'லால் சலாம்' - புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Last Updated : Jan 9, 2024, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.