தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 6, 7 ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை செய்கிறார்.
முதலமைச்சர் வருகையையொட்டி தேர்தல் பரப்புரை செய்யும் இடங்கள், பயணிக்கும் சாலைகள் போன்ற இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையுடன் மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேற்று (ஜன.4) ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் - சத்தியமங்கலம் சந்திப்பு சாலை, கோபி சாலை ஆகியவற்றை ஆய்வு செய்தார். கோயம்புத்தூர்- சத்தியமங்கலம் சந்திப்பு சாலையில் உள்ள எஸ்பிஎஸ் பெட்ரோல் பங்க் வளாகத்தை ஆய்வு செய்து முதலமைச்சர் செல்லும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பங்க்கில் பெட்ரோல் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.
பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் வரும் வாகனங்கள் பெரியூர் வழியாக சத்தியமங்கலம் பேருந்து நிலையத்துக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து புன்செய் புளியம்பட்டியில் முதலமைச்சர் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்சி நடக்கும் மண்டபம் மற்றும் சாலை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதலமைச்சர் வருகையின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இடங்கள், போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது” என்றார்.
இதையும் படிங்க:முத்திரைத்தாள் வரியைக் குறைக்க ரியல் எஸ்டேட் துறையினர் கோரிக்கை