ETV Bharat / state

தாளவாடியில் 3 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை : 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

தாளவாடியில் 3 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தாளவாடியில் 3 மணி நேரம் கொட்டித் தீர்த்த  கனமழை : 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

author img

By

Published : May 18, 2022, 9:35 AM IST

Updated : May 18, 2022, 12:29 PM IST

ஈரோடு, மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் நேற்று மாலை கனமழை பெய்தது. தாளவாடி, அருள்வாடி, பனக்கள்ளி,மாதள்ளி,திகனாரை தொட்டகாஜசனூர், சிக்கள்ளி, இக்களூர் மற்றும் கல்மண்டிபுரம் வனப்பகுதியில் மழை கொட்டி நீர்த்தது. இந்த மழையால் 5 க்கும் மேற்பட்ட ஒடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாளவாடி சுற்று வட்டாரத்தில் சுமார் 3 மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்ததால் ஓடைகள் மற்றும் காட்டாறுகளில் செந்நிற மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

பீம்ராஜ்புரத்தில் இருந்து சூசைபூரம் செல்லும் தரைப்பாலம், சிமிட்டஹள்ளியில் இருந்து மாதள்ளி தரைப்பாலம், தாளவாடி கும்பாரகுண்டி தரைப்பாலம் என 5 க்கும் மேற்பட்ட தரைப்பாலங்களில் வெள்ளம் கரைபுண்டு ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆங்காங்கே சாலையில் உள்ள தரைப்பாலங்களில் செந்நிற மழைநீர் பாலத்தை மூழ்கடித்த படி சென்றதால் மலை கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தாளவாடியில் 3 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை

மேலும் மலை கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. தொடர் மழையால் மலை கிராமங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த மழைநீர் கர்நாடகம் சென்று அங்கு உள்ள சிக்கல்லா அணையில் கலந்து வீணாகிறது. மழைகாலங்களில் வெள்ளநீரை தடுத்து தடுப்பணைகள் கட்டி அதில் நீரை தேங்கினால் கரநாடகத்துக்கு செல்வதை தடுத்து தமிழக விவசாயிகள் பயன்படுத்த முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம்!

Last Updated : May 18, 2022, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.