சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுங்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகனப் போக்குவரத்து நடைபெறுகிறது.
இந்நிலையில் சங்ககிரியிலிருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி, கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் செல்வதற்காக திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது.
7ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பின்புறமாக சென்று சாலையோர தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு மலைச்சரிவில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். லாரி மலைச்சரிவில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.