ETV Bharat / state

மதிப்பெண் பட்டியலில் எவ்வித குழப்பமும் இல்லை - செங்கோட்டையன்! - அமைச்சர் செங்கோட்டையன் செய்திகள்

ஈரோடு: பள்ளி மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் எவ்வித குழப்பமும் இல்லை, பாடங்களுக்கு ஏற்றார் போல் பட்டியல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

sengottaiyan
author img

By

Published : Oct 5, 2019, 9:47 PM IST

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கோபி கலை, அறிவியல் கல்லூரியில் இஸ்ரோ மற்றும் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விண்வெளி கண்காட்சி தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், முன்னாள் கேரள ஆளுநர் சதாசிவம், இஸ்ரோ இயக்குனர் ராஜராஜன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 'இது போன்ற விண்வெளி கண்காட்சியால் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படும். மாணவர்களின் தனித்தன்மை வெளிக்கொண்டுவர இக்கண்காட்சி உதவும். இக்கண்காட்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர், தனது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். விண்வெளித்துறையில் உலகே வியக்கும் வண்ணம் இந்தியா முன்னேறி வருகிறது.'

மேலும், 'புதிய கல்வி கொள்கையால் பள்ளி மாணவர்களின், மதிப்பெண் பட்டியலில் எவ்வித குழப்பமும் ஏற்படாது. ஐந்து பாடங்களை எழுதும் மாணவர்களுக்கு 500 மதிப்பெண் கொண்ட மதிப்பெண் பட்டியலும், ஆறு பாடங்களை எழுதும் மாணவர்களுக்கு 600 மதிப்பெண் கொண்ட பட்டியலும் வழங்கப்படும்.' என்றார்.

மேலும் இக்கண்காட்சியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்

இதையும் படிங்க:

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

Intro:ஈரோடு ஆனந்த்
அக்.05

மதிப்பெண் பட்டியலில் எந்தவித குழப்பமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்!

மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் எந்தவித குழப்பமும் இல்லை என்றும் தனித்தனியாக பிரித்துத் தரப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Body:உலக வின்வெளி வாரத்தை முன்னிட்டு மத்திய அரசின் இஸ்ரோ மற்றும் ஸ்ரீ ஹரிகோட்டா மற்றும் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் இஸ்ரோ வான்வெளி ஆராய்ச்சி கண்காட்சி தொடங்கியது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் செயல்படும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறையும், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையமும் இணைந்து நடத்தும் விண்வெளி கண்காட்சி இன்று தொடங்கியது.

மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன், முன்னாள் கேரள ஆளுநர் சதாசிவம் மற்றும் இஸ்ரோ இயக்குனர் ராஜராஜன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது

இது போன்ற நிகழ்ச்சிகளால் மாணவர்களின் அறிவுத் திறன் மேம்படும் இந்த நிகழ்ச்சியானது தமிழக இளைஞர்கள் விண்வெளி செல்ல வேண்டும் என்ற கனவு மாதிரிக்காக தான் நடக்கிறது என்றார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களின் தனித்தன்மை வெளிவர உதவும் என்றும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் பெரும் ஆதரவு தந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்றார்.

உலகே வியக்கும் வண்ணம் இந்தியா முன்னேறி வருகிறது என்றவர் விரைவில் அட்டர் டிங்கர் லெப் அமைக்கப்படும் என்றார்.

Conclusion:மேலும் மதிப்பெண் பட்டியலில் எந்தவித குழப்பமும் இல்லை. 500 மற்றும் 600 மார்க் எடுப்பவர்களுக்கு தனி தனியாக மார்க் ஷீட் வழங்கப்படும் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.