ETV Bharat / state

கீழ்பவானி கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு 10 நாட்களுக்குள் சீரமைக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி உறுதி

பெருந்துறை அருகே கீழ்பவானி பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு 10 நாட்களுக்குள் சீரமைக்கப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி உறுதியளித்துள்ளார்.

கீழ்பவானி கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு 10 நாட்களுக்குள் சீரமைக்கப்படும்

author img

By

Published : Dec 12, 2022, 10:52 AM IST

கீழ்பவானி கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு 10 நாட்களுக்குள் சீரமைக்கப்படும்

ஈரோடு: பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி பிரதான கால்வாயில் நேற்று மாலை உடைப்பு ஏற்பட்டது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது நாளாக வெள்ளம் வடியாமல் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி, ”கீழ்பவானி பாசன கால்வாய் உடைப்பு சீரமைக்கப்பட்டு 10 நாட்களுக்குள் பாசனத்திற்குத் தண்ணீர் வழங்கப்படும் என்றார். இதற்காகத் துரிதமாகத் தற்காலிகமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கால்வாய் சீரமைப்பு திட்டத்தில் மாற்றுக் கருத்து இருப்பதால் இது குறித்து இருதரப்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இருதரப்பும் ஒத்துக்கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார். எனவும்

மேலும், பாதிக்கப்பட்ட நிலங்கள் கணக்கெடுத்து இழப்பீடு வழங்கப்படும் என்று கூறிய அமைச்சர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டதில் சதித் திட்டம் இருப்பதாக ஒரு தரப்பு விவசாயிகள் மத்தியில் கருத்து நிலவுவது குறித்த கேள்விக்குப், இதில் எந்த சதியும் இல்லை” என்றார்.

இதையும் படிங்க: அந்தியூரில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.