ETV Bharat / state

'ஆன்மிகவாதிகள், திராவிடர்கள் ஏற்றுக்கொள்ளும் அரசாக அதிமுக விளங்குகிறது' - அமைச்சர் செங்கோட்டையன்

'ஆன்மிக வாதிகளும், திராவிட வாதிகளும் ஏற்றுக்கொள்ளும் அரசாக அதிமுக அரசு இருந்து வருவதாகவும், அனைத்து மத மக்களும் ஒற்றுமையுடன் வாழ முதலமைச்சர் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆலயங்களுக்கு சென்று வழிபட்டதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

the aiadmk government is accepted by spiritualists and dravidians says minister sengottaiyan
'ஆன்மிக, திராவிட வாதிகள் ஏற்றுக்கொள்ளும் அரசாக அதிமுக அரசு இருக்கிறது' - அமைச்சர் செங்கோட்டையன்
author img

By

Published : Dec 26, 2020, 4:44 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காராப்பாடியில் சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

மேலும், சாவக்கட்டுபாளையத்தில் தமிழ்நாடு அரசு மினி கிளினிக்கை தொடங்கி வைத்ததோடு, பொலவபாளையம் ஊராட்சியில் 120 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடு, செம்மறி ஆடுகளை அவர் வழங்கினார்.

the aiadmk government is accepted by spiritualists and dravidians says minister sengottaiyan
பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “தமிழ்நாடு சுகாதாரத் துறையை பிரதமர் பாராட்டியதை சுட்டிக்காட்டியதோடு, அனைத்து மக்களும் மத ஒற்றுமையோடு வாழ்வதற்கு மூன்று ஆலயங்களுக்குச் சென்று முதலமைச்சர் வழிபாடு மேற்கொண்டதாகவும் ஆன்மிக வாதிகளும், திராவிட வாதிகளும் ஏற்றுக்கொள்ளும் அரசாக அதிமுக அரசு அமைந்துள்ளது” எனத் தெரிவித்தார்

இதையடுத்து, அடுத்தாண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்கப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அதனை மக்கள் நல்வாழ்வுத் துறையும், முதலமைச்சரும்தான் முடிவு செய்யவேண்டுமே ஒழிய நான் அல்ல” எனப் பதிலளித்தார்.

'ஆன்மிக, திராவிட வாதிகள் ஏற்றுக்கொள்ளும் அரசாக அதிமுக அரசு இருக்கிறது' - அமைச்சர் செங்கோட்டையன்

படிப்படியாக ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், ரூ. 64 கோடியில் அம்மா விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணி வருகிற ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் தற்போது 75 விழுக்காடு கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பொங்கல் பரிசு வழங்க நியாயவிலைக்கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக பல இடங்களில் புகார் வந்துள்ளதாகவும் அதனை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சாதி வாரியான கணக்கெடுப்பு அனைவருக்கும் நல்லது - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.