ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 17ஆம் தேதி வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில், யானை தாக்கி வனஊழியர், சமூக ஆர்வலர் என இருவர் உயிரிழந்ததையடுத்து, இந்தப் பணி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது மீண்டும் வனவிலங்கு கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம், கடம்பூர், கேர்மாளம், ஆசனூர், தலமலை, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியை வன ஊழியர்கள் ஐந்து பேர் மட்டும் மேற்கொள்கின்றனர்.
மூன்று நாள்கள் பகுதிவாரி கணக்கெடுப்பு, மூன்று நாள்கள் நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பு என இரண்டு விதமாக இந்த பணியை நடத்துகின்றனர். வனஉயிரனங்களின் எச்சம், கீறல், கால்தடங்கள், வனவிலங்குகளை நேரடியாக பார்த்தல் போன்றவை மூலம் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறும். இதற்கென அதிநவீன கேமராக்கள், எம்ஸ்டிப், வியூ பைன்டர், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க : தொலைத்தொடர்பற்ற வாக்குச்சாவடிகளில் டி.ஆர்.ஓ. ஆய்வு!