ஈரோடு: சத்தியமங்கலத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “கால சூழ்நிலைகளில் வெட்டுக்கிளி, வேடந்தாங்கல் பறவை, பட்டுப்பூச்சி, பருவ கால சிட்டுக்குகள் ஆகியவற்றை போல பலர் பிரிந்து சென்றாலும், அதிமுகவை அசைக்க முடியாது.
சிலர் போவார்கள்; வேடந்தாங்கல் பறவையை போல திரும்பி வருவார்கள். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். எல்லோரும் சேருவோம். மக்கள் இருக்கிறார்கள். நாளை தேர்தல் வைத்தாலும் நாம் 40 தொகுதிகளிலும் ஜெயிப்போம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தொடக்கம்