ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி, தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய அடர்ந்த வனப்பகுதியாக விளங்குகிறது.
இது 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு உள்ள 10 வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன.
கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் வனப்பகுதியில் உள்ள வனக்குட்டைகள், தடுப்பணைகள், ஓடைகளில் தண்ணீர் வற்றின. இதனால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர், தீவனம் தேடி வனத்தை விட்டு வெளியேறி, கிராமங்களுக்குள் புகுந்து, விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் வறட்சி நீங்கி மரம், செடி, கொடிகள் துளிர்த்து பச்சைபசேலேன காட்சியளிக்கிறது.
மேலும் வனப்பகுதியில் உள்ள தடுப்பணைகள், வனக்குட்டைகள், ஓடைகளில் நீர் நிரம்பியுள்ளது. இதனால், வனவிலங்குகளின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு