ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடியாகும். தற்போது அதன் நீர் இருப்பு 32.8 டிஎம்சி. பவானிசாகர் அணை முழு கொள்ளளவான 105 அடியை நவம்பர் 8ஆம் தேதி எட்டியது.
கடந்த 10 நாட்களாக அணை 105 அடியாக நீடித்து, அணையின் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மூன்றாயிரம் கன அடியிலிருந்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததுள்ளது.
அணையின் நீர்வரத்து அதிகமானதால் அணையிலிருந்து பவானி ஆற்றுக்கு மேல் மதகில் 17 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் தாழ்வான பகுதியில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுப்பணித் துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை