ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கிரானைட் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு குவாரிக்கான அனுமதியைப் பெற்று ரஃப் கற்களையும், பாறை மணலையும் வெளியே விற்று வருவதாகவும்; அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வெடிவைத்து கிரானைட் கற்களை எடுப்பதால் வீடுகள் சேதமடைந்தும், குவாரியில் தேங்கும் ரசாயன கழிவுநீரை இரவு நேரத்தில், கீழ்பவானி கசிவுநீர் பாசனக் கால்வாயில் கலந்துவிடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் கிரானைட் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி, கிரானைட் குவாரியின் லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த காவல்துறையிடமும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து கிரானைட் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.
இதையும் படிங்க:
கடனை திருப்பி செலுத்தாத பிரபல கிரானைட் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி!