தமிழ்நாடு முழுவதும் மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டுக்கு முன் கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பணியாற்றிய மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களுக்கு தகுதியின் அடிப்படியில் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று மின்வாரி துறை அமைச்சர் மூலமாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மின் துறை அமைச்சர் அறிவித்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஊராட்சி கோட்டை மின் உற்பத்தி தடுப்பணையின் முன்பு 100க்கும் மேற்பட்ட மின் வாரிய ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களது கோரிக்கையை தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் இல்லை என்றால், மாநில அளவில் போராட்டங்கள் நடத்துவோம் என எச்சரித்தனர்.
இதையும் படிங்க: செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரித்து பொதுமக்கள் போராட்டம்!