ETV Bharat / state

சத்தியமங்கலம் வனச் சாலைகளில் வழிகாட்டி பெயர் பலகைகள் வைப்பு!

ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் உள்ள வனச் சாலைகளில் சுற்றுலா பயணிகள் எளிதாக பயணிக்க சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு வண்ண நிறங்களில் வழிகாட்டி பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

வழிகாட்டி பெயர் பலகைகள்  சத்தியமங்கலம் வனச் சாலைகளில் வழிகாட்டி பெயர் பலகைகள் வைப்பு  Placement of guide name boards on Satyamangalam forest roads  name boards  Satyamangalam forest  சத்தியமங்கலம் வனச் சாலை
Satyamangalam forest
author img

By

Published : Dec 1, 2020, 8:10 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் பவானிசாகர் அணை, பண்ணாரி அம்மன் கோயில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

இதேபோல், சத்தியமங்கலத்தில் இருந்து ஊட்டி, மைசூரு, ஆசனூர், தாளவாடி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் அருகாமையில் உள்ளன.

இதன் காரணமாக, சத்தியமங்கலம் வழியாகச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பயணிக்கின்றனர். நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக பயணிகள் அருகில் உள்ள ஊர்கள், வழித்தடத்தை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சத்தியமங்கலத்தில் உள்ள முக்கிய சாலைகளில் அடர்ந்த வனப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சுற்றுலா தலங்களை அறிந்துகொள்ளும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு வண்ண நிறங்களில் வழிகாட்டி பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதில், பவானிசாகர் அணை, பண்ணாரி அம்மன் கோயில், தாளவாடி, ஊட்டி, மைசூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல வழிகாட்டிப் பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்தில் ஊரின் பெயர்கள் எழுதப்பட்டு அதில் எவ்வளவு கிலோமீட்டர் தூரம் என்பதை குறிப்பிடப்பட்டு அம்புக்குறி இடப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை சார்பில் வழிகாட்டி பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெயர் பலகையை பார்த்து எளிதாக தாங்கள் செல்ல வேண்டிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பெயர் பலகைகள் வாகன ஓட்டிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: டன் கணக்கில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றிய திமுக எம்.எல்.ஏ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.