ETV Bharat / state

நோயுற்ற முதியவரை தவிக்க விட்டுச் சென்ற உறவுகள்! - etvbharat

ஈரோடு: அரசு மருத்துவமனையில் அனுமதித்தபின் உறவினர்கள் விட்டுச் சென்றதால், நோயுற்ற முதியவர் சிகிச்சை பெறாமல் மருத்துவமனை வளாகத்தில் தவித்து வருகிறார்.

old-man-suffered
author img

By

Published : Aug 20, 2019, 9:22 PM IST

ஈரோடு திருநகர் காலனியைச் சேர்ந்தவர் மைதீன்கான் (66). கூலித்தொழிலாளியான இவருக்கு ஈசாக் என்ற மகனும் ஃபாத்திமா என்ற மகளும் உள்ளனர். கடுமையான சுவாசக்கோளாறால் பாதிக்கப்பட்ட இவரை, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு அரசு மருத்துமனையில் உறவினர்கள் அனுமதித்தனர்.

இதன்பின், அவரை அங்கேயே விட்டு அவரது உறவினர்கள் சென்று விட்டதாக தெரிகிறது. நோயாளியுடன் உறவினர்கள் யாரும் இல்லாததால் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு சிகிச்சையளிக்காமல், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக மருத்துவமனையின் வெளியே படுக்க வைத்துள்ளது.

மருத்துவமனையில் தவிக்கும் முதியவர்

வீட்டின் முகவரியை சரியாகச்சொல்ல தெரியாததாலும், அழைத்துச்செல்ல உறவினர்கள் யாரும் இல்லாததாலும் மருத்துவமனை வளாகத்தில் கடந்த இரு தினங்களாக தவித்துவருகிறார். பகலில் ஈக்கள் மொய்க்கவும் இரவில் கொசுக்கள் கடியிலும் உறங்கி வரும் இவருக்கு மருத்துவமனைக்கு வரும் சிலர் உணவளித்து வருகின்றனர்.

Intro:ஈரோடு ஆனந்த்
ஆக.20

நோய் தாக்கிய முதியவரை தவிக்க விட்டு சென்ற உறவுகள்!

ஈரோட்டில் உடல் நலம் குன்றிய முதியவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த உறவினர்கள் பராமரிக்க உடனின்றி தவிக்க விட்டு சென்றதால், மருத்துவர்களும் சிகிச்சையளிக்க மறுத்து அவரை வெளியே படுக்க வைத்தனர். இதனால், இரண்டு நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் உணவின்றி வெட்டவெளியில் அந்த முதியவர் தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது..

Body:ஈரோடு திருநகர் காலனியை சேர்ந்தவர் 65 வயதான மைதீன்கான். கூலித்தொழிலாளியான இவருக்கு ஈசாக் என்ற மகனும் பாத்திமா என்ற மகளும் உள்ளனர். கடுமையான சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த மைதீன்கானை கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோடு அரசு மருத்துவமனையில் அவரது உறவினளர்கள் சேர்த்துள்ளனர்.

இதன் பின் அவரை பராமரிக்க உடன் யாரும் இல்லாமல் பரிதவிக்க விட்டுச்சென்றனர். நோயாளியுடன் உதவியாளர்கள் யாரும் இல்லாததால் மருத்துவமனை நிர்வாகம் முதியவருக்கு சிகிச்சை அளிக்காமல் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக மைதீன்கானை வெளியே அழைத்து வந்து படுக்க வைத்தனர். வீட்டிற்கு அழைத்து செல்ல உறவுகளும் இல்லாமல், உண்ண உணவும் இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தவித்தபடி உள்ளார் மைதீன்கான்.

பகலில் ஈக்கள் மொய்க்கவும் இரவில் கொசுக்கள் கடிக்கவும் வேறு வழியின்றி மருத்துவமனை வாயிலை வெறித்தபடி சிகிச்சையும் கிடைக்காமல், முகவரியை சரியாக கூறி வீட்டிற்கும் செல்ல முடியாமல் முதுமையும் வியாதியும் வாட்ட வழிதெரியாமல் விழிபிதுங்கி அமர்ந்திருக்கும் முதியவருக்கு மருத்துவமனைக்கு வந்த சக நோயாளிகளும், நோயாளிகளை பார்க்க வந்தவர்களும் அவருக்கு உணவளித்து வருகின்றனர்.

Conclusion:இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, உடன் யாரும் இல்லாமல் நோயாளிகளை அனுமதிப்பது இல்லை என்றும், மைதீன்கான் குறித்த தகவல் தனக்கு ஏதும் தெரியவில்லை என்றும் கூறினர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.