ETV Bharat / state

சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்.. ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பரப்புரை..

author img

By

Published : Feb 5, 2023, 5:07 PM IST

பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

தா.மோ. அன்பரசன்
தா.மோ. அன்பரசன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் தா.மோ. அன்பரசன் பரப்புரை

ஈரோடு: காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில் கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு நாச்சியப்பா வீதி, அகில்மேடு பகுதிகளில் சிறு தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்களிக்க கோரிய அவர்கள், திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், “பொதுமக்கள் மத்தியில் நல்ல எழுச்சி இருக்கின்றது. ஒரு வார காலமாக மக்களை சந்திக்கும் பொழுது வரவேற்பை காண முடிகிறது. வாக்கு சேகரிக்க செல்லும்போது உற்சாகமாக வரவேற்பு அளிக்கிறார்கள். கடந்த ஒன்றே முக்கால் ஆண்டுகால திமுக ஆட்சியில் செய்திருக்கும் சாதனைகள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஈரோட்டில் மக்களுக்கு தேவையான பணிகளை நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள். இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரும் வெற்றியை பெரும். தொழில் துறையினரின் கோரிக்கைகள் இந்த ஆட்சியில் நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்றார்.

இதையும் படிங்க: தைப்பூசம்: பழனி முருகன் கோயிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.