ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்றார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “கரோனா பிரச்னையை காரணம் காட்டி குஜராத்தில் தமிழ் பள்ளி மூடியது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். அக்டோபர் 1ஆம் தேதிமுதல், பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில்தான் முடிவுசெய்யப்படும்.
பெற்றோர்கள் ஒப்புதல் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என ஆணையில் கூறப்பட்டுள்ளது. பாட திட்டம் குறைப்பது குறித்து முதலமைச்சரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
பாடங்களை இன்னும் குறைக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்வார். பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை இந்த செப்டம்பர் வரை நடைபெறும், மாணவர்களின் சேர்க்கையை பொறுத்து அதனை நீட்டிப்பு செய்யப்படும்.
50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிகளுக்கு வர விலக்கு அளிப்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் முடிவெடுப்பார். அடுத்த மாதம் முதல் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் 14474 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம். பள்ளிகள் திறப்பது குறித்த முதலமைச்சர் அறிவித்தவுடன் தெரிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கரோனா தடுப்புப் பணி, மக்கள் வாழ்வாதாரத்திற்கு ரூ.7,321 கோடி செலவு...!'