ETV Bharat / state

'அனைத்து மாணவர்களும் தொலைக்காட்சியில் பாடம் பயில நடவடிக்கை' - அமைச்சர் செங்கோட்டையன் - minister senkottaiyan

ஈரோடு: தமிழ்நாட்டில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தொலைக்காட்சியில் பாடம் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

sengottaiyan  அமைச்சர் செங்கோட்டையன்  பள்ளிகளில் வைபை வசதி  தொலைக்காட்சி மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடம்  minister senkottaiyan  school wifi facilety
'வை-பை வசதியின் மூலம் பள்ளியில் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்கலாம்'- அமைச்சர் செங்கோட்டையன்
author img

By

Published : Jul 15, 2020, 5:01 PM IST

காமராஜர் பிறந்தநாளையொட்டி வெள்ளாளபாளையம் ஊராட்சியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா பாடப் புத்தகங்களைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பதால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணி மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

மாணவர்களின் வசதிக்காக 6 ஆயிரத்து 19 பள்ளிகளில் வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே டவுன்லோடு செய்து பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். யூடியூப் மூலமாகவும் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டிலிருந்தே கல்வி கற்கவும், சந்தேங்களைக் கேட்கவும் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை மூன்று தினங்களுக்குள் வெளியிடப்படும்.

தொலைக்காட்சிகளில் பாடம் நடத்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், தொலைக்காட்சிகள் மூலம் கல்வி கற்பிக்கப்படும். அதனை பெற்றோர்களும் கண்காணித்துக் கொள்ளலாம். ஒரு வார காலத்துக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தங்கள் வழங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ஓடாத பேருந்துகளுக்கு ஒரு லட்சம் வரியா?அரசை கண்டித்த தனியார் பள்ளிகள் சங்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.