கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக சிவப்பு நிற மண்டலமாக இருந்த ஈரோடு மாவட்டம் பச்சை நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எழுமாத்தூர் அரசு கலைக்கல்லுரியில் கடந்த 10 நாள்களாக தங்க வைக்கப்பட்டிருந்த கொடுமுடி, ஈரோடு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 43 பேர் அவர்களது தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படும் காலம் முடிவடைந்ததையடுத்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் சிவசுப்ரமணியன், மருத்துவக் குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டு தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருந்தவர்களை மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அவர் பேசுகையில், " உங்கள் வீடுகள் அருகாமையில் தங்கியிருப்பவர்கள் யாருக்காவது நோய் அறிகுறி உள்ளது தெரிந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இங்கிருந்து செல்பவர்களுக்கு சிகிச்சை தேவைப்பட்டால் தயங்காமல் மருத்துவமனைகளை அணுகி சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
இதுநாள்வரை தங்கியிருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பை வழங்கியவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க:வெளியூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரம்!