ஈரோடு: தமிழ்நாடு கர்நாடகத்தை இணைக்கும் கடம்பூர் மலைப்பாதை கேஎன் பாளையம் சோதனைச்சாவடி வழியாக நாட்டு வெடி குண்டு செய்ய தேவையான பொருள்கள், கஞ்சா, போதைப்பாக்குகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடம்பூரில் இருந்து வந்த வாகனங்களை காவல்துறையினர் டைகர் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டனர். பேருந்தில் வந்த பயணிகளிடமும் சோதனை நடைபெற்றது. பயணிகளின் காய்கறி மூட்டைகள், பைகள் சோதனையிடப்பட்டன. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் டெம்போ வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
திடீர் சோதனைகுறித்து கேட்டபோது இரு மாநில வாகனங்கள் பயணிப்பதால் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக சோதனை நடத்தப்பட்டதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் கிருபா பிரபாகரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு - தீவிரமடையும் போராட்டம்