ETV Bharat / state

வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து; பயணிகள் அவதி! - repair

ஈரோடு: பவானிசாகர் வனப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தெங்குமரஹாடா கிராமத்திற்குச் செல்லும் அரசுப் பேருந்து ஒன்று பழுதாகி நின்றதால் பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.

Govt. bus struck up in Flood
author img

By

Published : Aug 10, 2019, 12:41 PM IST

பவானிசாகர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியால் சூழப்பட்டதுதான் தெங்குமரஹாடா என்ற கிரமம். இக்கிராமத்தில் சுமார் 300 வீடுகளில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இக்கிராம மக்கள் மாயாற்றைக் கடந்து பேருந்தின் மூலம் பவானிசாகர், சத்தியமங்கலத்திற்கு வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேபோல பவானிசாகர் வனப்பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதன் காரணமாக இரு தினங்களாக தெங்குமரஹாடா கிராமத்திற்குப் பேருந்து இயக்கப்படவில்லை. இந்நிலையில் வெள்ளம் வடிந்ததால் தெங்குமரஹாடா ஆற்றங்கரையிலிருந்து பவானிசாகர் நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்து எம்மட்டான் பள்ளம் என்ற இடத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி நகரமுடியாமல் நின்றது.

இதனால் பேருந்தில் வந்த பயணிகள் ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர். இது குறித்து பேருந்து நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பணிமனை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பழுதை நீக்கினர். இதையடுத்து பேருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

Intro:nullBody:tn_erd_02_sathy_govt_bus_repair_photo_tn10009

வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து

பவானிசாகர் வனப்பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக தெங்குமரஹாடா கிராமத்திற்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹடா வனப்பகுதியில் குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் கிராமத்தை ஒட்டி ஓடும் மாயாற்றை கடந்து பேருந்தில் ஏறி பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் மாயாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதே போல பவானிசாகர் வனப்பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக இரு தினங்களாக தெங்குமரஹாடா கிராமத்திற்கு பேருந்து இயக்கப்படவில்லை. பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா கிராமத்துக்கு செல்லும் 23 கிமீ தூரத்துக்கு குறுக்கே 25க்கும் மேற்பட்ட பள்ளங்களில் தண்ணீர் ஓடுகிறது. இந்நிலையில் வெள்ளம் வடிந்ததால் தெங்குமரஹட ஆற்றங்கரையில் இருந்து பவானிசாகர் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து எம்மட்டான் பள்ளம் என்ற இடத்தில் பள்ளத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி நகரமுடியாமல் நின்றது. இதனால் பேருந்தில் வந்த பயணிகள் ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இது குறித்து பேருந்து நிலைய ஊழியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பணிமனை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பழுது நீக்கினர். இதையடுத்து அரசு பேருந்து மீண்டும் புறப்பட்டு சென்றது.
Conclusion:null

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.