சேலம்: சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் உத்தரவின் பேரில் தனிப்படையினர் இரவு பகலாக சோதனை வேட்டையில் இறங்கினர். இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 570 கிலோ புகையிலை பொருள்களை தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
போதைப் பொருள்கள் பறிமுதல்
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்தது குறித்து கடந்த 2 நாள்களில் மட்டும் 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், குட்கா புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக எஸ். முத்து (27), செல்வகுமார் (30), முகமது யூசுப் (29), வெங்கடேசன் (49) ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: 2,685 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!