ETV Bharat / state

தீரன் பட பாணியில் தமிழ்நாட்டில் புலிகளை வேட்டையாடும் பவாரியா கும்பல்.. கோவையில் நடந்த வேட்டை.. - புலி தோல் கடத்தல்

நீலகிரி மாவட்டம் குந்தா வனத்தில் புலியை கொன்று புலி தோலை கடத்திய வடமாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 25, 2023, 4:54 PM IST

Updated : Feb 25, 2023, 7:36 PM IST

நீலகிரி: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அரசூர் கிராமத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்த சிலர் தங்கியிருந்தனர். இவர்கள் சந்தேகப்படும் படி நடந்து கொண்டிருந்ததால், மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர் அவர்களது உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில் புலித்தோல், புலிநகம், புலி எலும்புகள் சிக்கின. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பஞ்சாப்பை சேர்ந்த ரத்னா (40) மங்கல் (28) கிருஷ்ணன் (59), ராஜஸ்தானை சேர்ந்த ராம் சந்தர் (50) ஆகியோர் புலியை வேட்டையாடியது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்து புலி தோல் உள்ளிட்டவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட எடக்காடு அருகே அடர்ந்த வனப்பகுதியில் புலியை தாக்கி கொன்று புலி தோலை கடத்தியது தெரிய வந்தது. நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், உதவி வன பாதுகாவலர் சரவணன் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் நான்கு பேரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இவர்கள்

உள்ளூர் மக்களுடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமங்களில் சந்தேகப்படும் படி நடந்து கொள்ளும் வட மாநிலத்தவர் குறித்து வனத்துறையினர் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆசிரம வழக்கில் கைதான 8 பேரை 3 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க அனுமதி!

Last Updated : Feb 25, 2023, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.