ஈரோடு: சத்தியமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலத்தில் கோவை, அவினாசி, திருப்பூர், சேலம் மற்றும் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வாழைகளை விற்பனை செய்துவருகின்றனர். சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பவானிசாகர், சிக்கரசம்பாளையம், கே.என்.பாளையம், புன்செய்புளியம்பட்டி, அரசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 495-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1,050 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
ஏலத்தில் கதளி ரகம் ஒரு கிலோ 30 முதல் 42 ரூபாய் வரையிலும், நேந்திரன் ரகம் ஒரு கிலோ 20 முதல் 32 ரூபாய் வரையிலும் விற்பனையானது. அதேபோல பூவன் தார் 450 ரூபாய் வரையிலும், தேன்வாழை ரூ.550 வரையிலும், செவ்வாழை ரூ.700 வரையிலும், பச்சை நாடன் ரூ.600 வரையிலும், மொந்தன் வாழை ரூ.300 வரையிலும் விற்பனையானது.
விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 1,050 வாழைத்தார்களும் 1.65 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக நேந்திரம் கிலோவுக்கு 32 ரூபாய்க்கு விற்பையானது. அதேபோல கதளி, செவ்வாழை, தேன் வாழைத்தார் அதிக விலைக்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: ரூ.7 கோடி செலவில் செல்லூர் மற்றும் வண்டியூர் கண்மாய்கள் புனரமைப்பு